2025 மே 14, புதன்கிழமை

கிராமிய வங்கிகளை நவீனமயப்படுத்தப்பட நடவடிக்கை

Super User   / 2013 டிசெம்பர் 09 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ்.முஸப்பிர்

கூட்டுறவு கிராமிய வங்கிகளை நவீனமயப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகரவின்  சிந்தனையின் கீழ் வடமேல் மாகாணத்தில் இயங்கும் 34 கூட்டுறவு கிராமிய வங்கிகள் 60 மில்லியன் ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அடுத்த வருடம் குளியாப்பிட்டியில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காடசியினையொட்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு இணைவாக இந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வடமேல் மாகாணத்தில் வசிக்கும் கிராமிய மக்களின் வங்கித் தேவைகளை மிகவும் இலகுவாகவும் விரைவாகவும்  சிறந்த முறையிலும் செய்து கொடுக்கும் நோக்கிலேயே இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது. வடமேல் மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .