2025 மே 14, புதன்கிழமை

பரீட்சை நிலைய கடமைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வியாபார நிலையமொன்றிலிருந்த பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து தம்புத்தேகம பொலிஸாரினால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜாங்கனை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்தின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (11) இடம்பெற்றுள்ளதோடு சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தமுத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .