2025 மே 14, புதன்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


வடமேல் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தினால் 33 நகரங்களுக்கிடையில் நடத்தப்பட்ட 12 வகையான போட்டிகளில் வெற்றிபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றியீட்டிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தார்.

இந்தப் போட்டிகளில் மூன்று முதல் இடங்களை புத்தளம் நகரசபை பெற்றுக் கொண்டது.   சிறந்த சிறுவர் பூங்கா, சிறந்த தாய், சேய் சிகிச்சை நிலையம் மற்றும் சிறந்த கடைத்தொகுதியுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையம் ஆகியவற்றுககேமுதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் இந்த சான்றிதழ்களையும் நினைவுப் பரிசில்களையும் பெற்றுகொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .