2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அத்தியட்சகரின் வாகன விபத்து தொடர்பில் விசாரணை

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் பொலிஸ் அத்தியட்சகரின் வாகன விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி செம்பட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த கார் முச்சக்கர வண்டியில் மோதியமையினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இடம்பெற்ற இடத்தை மோட்டார் போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அனுரசிரி சேனாரத்ன மற்றும் த்தளம் பதில் நீதவான் அப்துல் காதர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .