2025 மே 14, புதன்கிழமை

பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ பிரதேச சபை ஆளுங் கட்சி உறுப்பினரின் தாக்குதலுக்குள்ளான  நபர் ஒருவர் மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ கம்மல பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

தான் உணவு விடுதியில் இருந்த சமயம் அங்கு மேலும் நால்வருடன் வந்த குறித்த பிரதேச சபை உறுப்பினர் தன்னைத் தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான வென்னப்புவ பிரசேத்தைச் சேர்ந்த லஹிரு மாலிங்க என்பவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச சபை உறுப்பினரும் தாக்குதலுக்குள்ளானவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் எனவும் தெரிவித்த பொலிஸார், பின்னர் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு ஒன்றினையடுத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .