2025 மே 14, புதன்கிழமை

அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் சடலம் மீண்டும் தோண்டியெடுப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

உடப்பு, செல்வபுரம் பகுதியினை சேர்ந்த 67 வயது முதியவரின் அடக்கம் செய்யப்பட்ட சடலம் இன்று காலை புத்தளம் நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டியெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை உயிரிழந்த குறித்த முதியவரின் சடலம் அன்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டது.

எனினும் பொலிஸாருக்கு கிடைத்த இரசகிய தகவலுக்கமைய புத்தளம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்றைய தினம் சடலம் தோண்டியெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் நீதிமன்ற நீதிபதி பாரதி விஜயரத்னவின் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்ட குறித்த சடலம், நீதிபதியின் உத்தரவுக்கமைய சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .