2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

மின் தாக்கி ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சிலாபம், காக்கைபள்ளி பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையில் கடமையாற்றிவருகின்ற ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

சிலாபம், பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான  ரோஹித திசேரா என்பவரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

இறால் பண்ணையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இவர் கடமையாற்றிக்கொண்டிருந்தபோது, மின் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த நிலையில்,  இவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .