2025 மே 14, புதன்கிழமை

ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவர் உண்ணாவிரதம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களுக்குச் சேதம் விளைவித்தவர்களைக் கைதுசெய்யுமாறு கோரி ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிலாபம்- புத்தளம் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முன்னால் இன்று பகல் அவர் ஆரம்பித்த இப்போராட்டத்தில் அவரது மனைவி, பிள்ளைகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு அவரது வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் வந்துள்ள ஆறு பேர் அவரது வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன் அங்கிருந்து பொருட்களுக்குச் சேதம் விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். 

இந்த தாக்குதலுக்கு வந்தவர்கள் அப்பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு நெருக்கமானவர்கள் எனவும், அவர்களை தான் அடையாளம் கண்டுள்ளதாகவும் குறித்த ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ்
நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை எனவும் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யும் வரை தான் தன் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அவர், வீட்டில் சேதமாக்கப்பட்ட பொருட்களையும் தன்னுடன் வைத்துக் கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியால் சென்ற பிரதி அமைச்சர் விக்டர் எண்டனி பெரேரா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவரிடம் பேசியதோடு சம்பந்தப்பட்டவர்களை உடன் கைதுசெய்யுமாறு பொலிஸாரைப் பணித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .