2025 மே 14, புதன்கிழமை

ரயில் கடவையில் விபத்து; கடற்படை வீரர் பலி: ஐவர் காயம்

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம்- யாழ்ப்பாணம் சந்தியிலுள்ள ரயில் கடவையில் கடற்படையினரின் வாகனமொன்று ரயிலுடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் கடற்படைவீரர்  பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரின் வாகனத்தில் பெண்கள் உட்பட 10 பேர் பயணம் செய்ததாகவும் காயமடைந்தவர்களில் ஐவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனத்தில் பூனேவ கடற்படை முகாமின் பொறுப்பதிகாரி அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்டோரே பயணித்துள்ளனர்.
அவருடைய பிள்ளைகள் இருவரும் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X