2025 மே 19, திங்கட்கிழமை

வண்ணாத்த வில்லு விபத்தில் இருவர் பலி: வாகனமும் எரிந்தது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 06 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளம்-மன்னார் வீதியில் சமகிகம எனும்  பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்த வில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் திசையிலிருந்து பயணித்த டிப்பர் ரக லொறி ஒன்றும் வண்ணாத்த வில்லு திசையிலிருந்து புத்தளம் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தையடுத்து மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கி வெடித்து தீப்பற்றிக் கொண்டதில் அந்த தீயில் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனமும் தீப்பற்றிக் கொண்டுள்ளது.

இவ்விபத்தில் வண்ணாத்த வில்லு பிரதேசத்தைச் சேர்ந்த சாமிநாதன் நந்தகுமார் (வயது 29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. எம். அசங்க பண்டார (வயது 18) என்ற இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவர்களது பிரேதங்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்விருவரும் மன்னார் வீதியில் பத்தாம் கட்டைப் பிரதேசத்தில் வாகன சேர்விலஸ் நிலையம் நடாத்தி வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தையடுத்து தீப்பற்றிக் கொண்ட டிப்பர் வாகனத்தை பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வண்ணாத்த வில்லு பொலிஸார் டிப்பர் வாகன சாரதியைக் கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X