2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வளமான வாழ்வுக்கு இலகுவான வழிமுறை

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு "வளமான வாழ்வுக்கு இலகுவான வழிமுறை" எனும் தொனிப்பொருளில் பொதுமக்களை விழிப்பூட்டச்செய்வற்காக வேண்டி புத்தளம் தள வைத்தியசாலையின்  ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை (13) புத்தளம் நகரில் இடம்பெற்றது.

புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸின் வழிகாட்டலில் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேராவின் தலைமையில் இந்த ஊர்வலம் இடம்பெற்றது.

புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் புத்தளம் பிரதான சுற்று வட்டம் ஊடாக மீண்டும் வைத்தியசாலையை சென்றடைந்தது. புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிசும்  ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .