2025 மே 19, திங்கட்கிழமை

யுவதியை கடத்த முயன்று குழியில் விழுந்தவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் பாலாவி பிரதேசத்தில் வியாழக்கிழமை (27) யுவதி ஒருவரை கடத்த முயன்ற போது குழியில் தவறி வீழுந்து கால் உடைந்த நிலையில் கைதான நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து தற்போது சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பாலாவி ருவன்புர பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி வியாழக்கிழமை (27) பிற்பகல் வழமைபோன்று கடமை முடிந்து வீடு செல்வதற்காக பாலாவி நாகவில்லு சந்தியில் பஸ்ஸை விட்டு இறங்கியபோது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அவ்யுவதியை பலாத்காரமாக முச்சக்கர வண்டியில் ஏற்றி பாழடைந்த இடமொன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அக்குழுவில் உள்ள ஒருவர்,யுவதியை பலவந்தமான முறையில் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு கடத்திசெல்ல முற்பட்ட வேளை அங்கிருந்து பாரிய குழியொன்றில் தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது அந்நபருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தப்பியோடிய யுவதி அருகிலிருந்த வீடொன்றிற்கு சென்று நடந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் சந்தேக நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கால் உடைந்த நிலையில் கைதான நபர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நபருக்கு எதிராக பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து வழக்குகள் ஏற்கனவே புத்தளம் நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X