2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தை பார்த்த அதர்ச்சியில் வெளிநாட்டவர் மரணம்

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர், எம்.என்.எம். ஹிஜாஸ்

பிரித்தானிய  பிரஜை ஒருவர் சனிக்கிழமை(29) காலை தான் செலுத்திச் சென்ற கெப்ரக வாகனத்தில் நபரொருவரை மோதியதையடுத்து, ஏற்பட்ட அதர்ச்சியால் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ பிரதேசத்தில் தங்கியிருந்து மிருக வளர்ப்பில் ஈடுபட்டு வந்த நிகலஸ் எலன் டோன் (வயது 65) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளத்திற்கு சென்ற  இவர் கருவலகஸ்வெவ நோக்கி திரும்பிகொண்டிருந்தபோது அநுராதபுரம் வீதியில் வைத்து நபரொருவரை தனது கெப் ரக வாகனத்தில் மோதியுள்ளார்.

இதனை பார்த்த அதர்ச்சியில் மேற்படி நபருக்கு நெஞ்சுவலி ஏற்பட,  அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது வாகனத்தில் மோதுண்ட நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X