2025 மே 19, திங்கட்கிழமை

ஒப்பந்த நிறுவனத்திற்குரிய வாகனங்களுக்குச் சேதம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கீரியங்கள்ளி - ஆண்டிகம வீதியில் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  ஒப்பந்த நிறுவனமொன்றுக்குரிய  வாகனங்களை அடித்துச் சேதப்படுத்திய சம்பவம் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

தேவால ஹந்தி பகுதியிலுள்ள குறித்த நிறுவனத்தின் வேலைத்தளத்திற்குள் நுழைந்தவர்கள் இவ்வாறு வாகனங்களைச் சேதப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இவ்வீதியில் கால்வாய்  கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில்; மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்  வீழ்ந்தனர். இதில்; படுகாயமடைந்த ஒருவர் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.  மற்றையவர் படுகாயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் குறித்த ஒப்பந்த நிறுவனத்திற்குரிய வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுவதாகவும்  பொலிஸார் கூறினர்.

இவ்வீதியில் பாரிய குழிகள் வெட்டப்பட்டுள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் குறித்த கொந்தராத்து நிறுவனங்களினால் போடப்பட்டிருக்கவில்லையென அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

குழியினுள் வீழ்ந்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X