2025 மே 19, திங்கட்கிழமை

தீர்மானத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்களுக்கு பிரசவ சிகிச்சைக்கான பயிற்சியினை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்காக வடமேல் மாகாண குடும்ப சுகாதார அதிகாரிகள் சங்கத்தினர் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் தெய்வ வழிபாட்டில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்ட குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தினத்தினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்ற புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்ட குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அங்கு தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். 

எமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காது விட்டால் தங்களுடைய போராட்டம் தொடருமென வடமேல் மாகாண குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் குருநாகல் மாவட்ட கிளையின் தலைவர்  திருமதி எம். ஏ. சமரநாயக்கா தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X