2025 மே 19, திங்கட்கிழமை

எதுல்புர ஊடகவியலாளர் சங்கத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


நாட்டினுடைய அபிவிருத்திப் பணிகளுக்கும் சிறந்ததொரு சமுதாயத்தை கட்டி எழுப்புதற்கும் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர். இவ்வாறு பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு நல்க வேண்டும் என்ற வகையில் சிரமமின்றி போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்காக இலவச போக்குவரத்து அனுமதி அட்டைகளை வழங்கி வருகின்றோம் என்று வடமேல் மாகாண நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் குனதாச தெஹிகம தெரிவித்தார்.

எதுல்புர ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் அனுசரணையுடன் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவும் ஊடகவியலாளர்களுக்கான போக்குவரத்து இலவச அனுமதி அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் குனதாச தெஹிகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

இந்த சித்திரைப் புத்தாண்டில் ஊடகவியலாளர் குடும்பத்தவர்கள் சகிதம்  விளையாட்டு மற்றும் ஏனைய மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில்  கலந்து சிறப்பிக்கும் வைபவத்தில் தானும் கலந்து ஊடகவியாளர்களை மகிழ்வூட்டுவதில் பெருமகிழ்வடைகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X