2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிளை தட்டியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஆனமடு - நவகத்தேகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருடன்  பயணித்த  மற்றுமொரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் உடம்பில்  தட்டிவிட்டு தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவரை கைதுசெய்ததாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இப்பெண் கான்ஸ்டபில் கடமை முடிவடைந்து மற்றொரு பொலிஸ் சார்ஜன்டுடன்  நேற்று வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் பின் ஆசனத்தில் பயணித்தவர் இக்கான்ஸ்டபிளை தட்டியுள்ளார். அத்துடன், தகாத  வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் ஆனமடு பொலிஸ் நிலையத்திற்கு மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் தகவல் வழங்கினர். இந்த நிலையில், இந்தச் சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .