2025 மே 10, சனிக்கிழமை

கைக்குண்டுகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 12 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02  கைக்குண்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும்  இருவரை புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி தல்கஸ்கந்த மற்றும் மெல்வத்தை பிரதேசங்களில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவி, மெல்வத்தை பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவரிடம் கைக்குண்டொன்று உள்ளதாக புத்தளம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 30 வயதுடைய குறித்த  இளைஞரை கைதுசெய்து விசாரித்தபோது அவரிடம் கைக்குண்டு இருப்பது தெரியவந்ததுடன்,  அவரின்  வீட்டில் மறைத்துவைக்கப்பட்ட  கைக்குண்டொன்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், இச்சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரித்தபோது,  அவரிடம் 02  கைக்குண்டுகள் இருந்ததாகவும் அவற்றிலொன்று  அவரின் நண்பரிடம்; உள்ளதையும் பொலிஸார் அறிந்துகொண்டுள்ளனர்.

இதன் பின்னர், பாலாவி தல்கஸ்கந்த பிரதேசத்திலுள்ள மற்றைய சந்தேக நபரை  கைதுசெய்து  விசாரித்தபோது, அவரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்ட  கைக்குண்டையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரை இன்று திங்கட்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது,   அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கான உத்தரவு நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இதன்படி, இவர்களை  பொலிஸ் நிலையத்தில் 07  தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X