2025 மே 10, சனிக்கிழமை

தனியார் பஸ் மோதி சிறுவன் பலி; தந்தை வைத்தியசாலையில் அனுமதி

Kanagaraj   / 2014 மே 20 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம் பிரதேசத்தில் இன்று(20) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குறித் சிறுவன் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - சிலாபம் வீதியில் தனது தந்தையுடன் வீதியோரமாக நடந்து செல்லும் போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், இவ்விருவர் மீதும் மோதியுள்ளதுடன்  வீதியில் வந்த முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும், மகனும் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முஹம்மது யூசுப் (4) எனும் சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், சிறுவனின் தந்தை சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பஸ் மோதிய முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

விபத்துடன் தொடர்புடை தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X