2025 மே 10, சனிக்கிழமை

சிறுமியுடன் குடும்பம் நடத்திய சிறுவன் கைது

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாடசாலை மாணவியான 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் 18 வயது சிறுவனை கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் மஹாவிலத்தவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு வியாழக்கிழமை(22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் சிலாபம் முகுனுவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டை தொடர்ந்து சிறுமியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சிறுமி வெயான்கொடை பிரதேசத்தில் உள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து தமது மகளுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் சிறுமியிடமிருந்து பெற்ற தகவல்களையடுத்து சந்தேக நபரான சிறுவன் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X