2025 மே 10, சனிக்கிழமை

மகள் துஷ்பிரயோகம்: தந்தை உள்ளிட்ட ஐவருக்கு வலைவீச்சு

Kanagaraj   / 2014 மே 29 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

14 வயதான மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் அவரது தந்தை உட்பட ஐவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வௌ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலைக்கு செல்லும் சிறுமியே இவ்வாறு அவ்வப்போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவராவார்.

கருவலகஸ்வௌ பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்திரினால் நேற்று புதன்கிழமை செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கருவலகஸ்வௌ பொலிஸார்  தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருவதோடு தாய் கட்டுநாயக்கா பிரதேசத்திலேயே தங்கியிருப்பதாகவும், தனது தந்தை மற்றும் இளவயது சகோதரர்கள் மூவருடன் தான் வசித்து வந்துள்ளதாக பொலிஸாரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

கடந்த வருட நடுப்பகுதியில் முதன் முறையாக தனது தந்தை தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ள சிறுமி, பின்னர் உறவு முறையான மாமா ஒருவரும், அதனைத் தொடர்ந்து உறவு முறை சகோதரர்கள் இருவர் இறுதியாக பாட்டன் ஒருவராலும் தான் அவ்வப்போது வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கருவலகஸ்வௌ பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வௌ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.பி. அபேரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • மனிதன் Saturday, 31 May 2014 11:39 AM

    மனிதன் மிருகமாகும் தருணம். மற்றது பழக்க வழக்கம் கடுமையைான தண்டனை மூலமே இதை கட்டுப்படுத்தலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X