2025 மே 10, சனிக்கிழமை

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ரீ.எம்.பாரிஸ்


பொலன்னறுவை மாவட்டத்தின் ஓநாகமுவ கிராம மக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க அல்-கிம்மா நிறுவனத்தினத்தினால் அக்கிராமத்தில் பல வருட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

கிம்மா நிறுவனத்தின்  பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூனின் (ஸஹ்வி),  பணிப்புரைக்கமைவாக நேற்று சனிக்கிழமை (31) நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் தலைமையிலான குழுவினர் அக்கிராமத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அம்மக்களின் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறித்தனர்.

அங்கு உரையாற்றிய பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் அல்-கிம்மா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

எமது அமைப்பினூடாக கிழக்கு மாகாணத்தில் பெரும் தொகையிலான மக்கள் இன வேறுபாடுகளுக்கு அப்பால் பயன்பெற்றுள்ளனர்.

அல் - கிம்மா நிறுவனம் ஏழை மக்களின் ஸ்தாபனமாகும். தேவையுடையோருக்கு என்றும் உதவிகளை வழங்க தயாராக இருக்கின்றது. எனவே இக்கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தமது நிறுவனம் தீர்வுகாண தீர்மானித்துள்ளதாக தனது உரையின்போது குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X