2025 மே 10, சனிக்கிழமை

நீர்த்தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Super User   / 2014 ஜூன் 02 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  கட்டைக்காடு கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையினை தீர்த்து வைக்கும் முகமாக நீர்த்தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை(31) நடைபெற்றது.

பிரதியமைச்சர் விக்டர் அண்டனி பெரேரா அடிக்கல்லினை நாட்டி குடிநீர்த்திட்டத்திற்கான வேலையினை ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்திற்கென 35 இலட்சம் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கமைய நடைபெற்ற மக்கள் நடமாடும் சேவையும், கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலும் குறித்த கிராம மக்களினால் குடிநீர் பிரச்சினை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X