2025 மே 10, சனிக்கிழமை

தும்புத்தொழிற்சாலையில் தீ விபத்து

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மாறாவில பிரதேசத்திலுள்ள தும்புத்தொழிற்சாலை தீ விபத்துக்குள்ளாகியதாக புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.

இந்த தீ விபத்து திங்கட்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளதுடன்  இதன்போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய அதிகாரிகள்   தெரிவித்தனர்.

சிலாபம் நகர சபை தீயனைப்பு படை, மாறாவில பொலிஸார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X