2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

வாகனத்தை கொள்ளையிட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வாகனமொன்றை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரையும்  லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும் இன்று புதன்கிழமை கைதுசெய்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளை தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் வாகன விற்பனைத் தரகரொருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பணக் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாகவே இக்கொள்ளை இடம்பெற்றதாகவும்  பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .