2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

விழிப்புணர்வூட்டும் இரத்த தான பேரணி

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


எதிர்வரும் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக இரத்த தான தினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வூட்டும் பேரணி நேற்று வெள்ளிக்கிழமை (06) புத்தளம் தள வைத்தியசாலையை வந்தடைந்தது.

இதன் போது புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், அதிகாரிகள், இரத்த கொடையாளிகள் என பலர், இப் பேரணியினை வரவேற்றனர்.

இந் நிகழ்வில் புத்தளம் பிரதேசத்திலுள்ள, இரத்த தானம் வழங்கும் கொடையாளிகள் பதக்கங்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புத்தளம் தள வைத்தியசாலையின் அத்தியட்சகர் அசோக் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .