2025 மே 10, சனிக்கிழமை

பெண்ணின் கைப்பையை திருடிய இருவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையைத் திருடிக் கொண்டு, தப்பிச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(06) வெள்ளிக்கிழமை மாலை  நாத்தாண்டியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டி, கடோல்கொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும், புகையிரதத்தில் பயணிக்கும் பெண்களின் கைப்பை மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடி வந்திருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை மாராவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X