2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்,எம்.எஸ்.முஸப்பிர்

கப் ரக வாகனமொன்றில் கஞ்சாவை கொண்டுசென்றதாகக்   கூறப்படும் 03 பேரை  ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், குறித்த வாகனத்தையும் 7.5 கிலோகிராம் கஞ்சாவையும்  கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

ஆனமடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கப் ரக வாகனத்தை சோதனையிட்டபோது, கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சந்தேக நபர்கள் குளியாப்பிட்டி மற்றும் கனேமுல்லை பிரதேசத்தைச்  சேர்ந்தவர்களாவர்.

இது தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .