2025 மே 10, சனிக்கிழமை

விபத்தில் பெண் பலி

Kogilavani   / 2014 ஜூன் 10 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

புத்தளம் அநுராதபுர வீதி,  17ஆம் கட்டை அளுத்கம பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இடம்பெற்ற   விபத்தில் இஹல புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். விமலாவதி (வயது 70) என்ற வயோதிபப் பெண்னே உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண்  மஞ்சள் கடவையை கடக்க முயன்றபோது காரொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக  புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி சாலியவௌ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  விபத்து தொடர்பில் சாலியவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X