2025 மே 10, சனிக்கிழமை

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் படுகொலை

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்னுகுணவில தேவாலஹந்தி பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில்   படுகொலை செய்யப்பட்டிருப்பதாகபள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

பொன்னவடுகே திலிண தில்றுக்ஷி (வயது 38) என்ற பெண்ணே வியாழக்கிழமை(12) இரவு இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பெண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பள்ளம பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அதன்போது கடுமையான வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட பெண் அயலவர்களால் முந்தல் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்துள்ளார்.

எனினும் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X