2025 மே 10, சனிக்கிழமை

ஜ.தே.க. எம்.பி. பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


ஐக்கிய தேசிய கட்சியின், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார பயணித்த கெப் ரக வாகனம் புத்தளம் - குருநாகல் வீதியின் 6ஆம் கட்டை பிரதேசத்தில் நேற்று(13) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியின் குறுக்காக சென்ற மாடொன்று லொறி ஒன்றில் மோதியதை அடுத்து, குறித்த லொறி நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த விபத்தில், நாடாளுமன்ற உறுப்பினருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என புத்தளம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X