2025 மே 10, சனிக்கிழமை

வீடு தீக்கிரை

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


முந்தல் பொலிஸ் பிரவுக்குட்பட்ட கணமூலைப் பகுதியில் வீடொன்று வெள்ளிக்கிழமை (13) எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் போது எவரும் பாதிக்குட்படவில்லையெனவும் தீக்கிரையாகிய வீட்டில் ஏற்பட்டுள்ள சொத்து சேதம் தொடர்பாக சரியான மதிப்பீடுகள் கணிக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாகவே இந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X