2025 மே 10, சனிக்கிழமை

மணல் பிடித்த ஐ.பிக்கு இடமாற்றம்

Kanagaraj   / 2014 ஜூன் 15 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாலியவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் அபேநாயக்க நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உப-தலைவரை  கடந்த ஆறாம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு இந்த பொலிஸ் பரிசோதகரே முன்னின்றார்.

இந்த சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் பரிசோதகரின் செயற்பாடு குறித்தும் புத்தளம் நீதவான் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

சம்பவம் இடம்பெற்ற போது தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிளின் நிலைமையை கவனத்தில் கொள்ளாது சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவித்தமை குறித்தும் நீதவான் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி பீ அறிக்கையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X