2025 மே 10, சனிக்கிழமை

டைனமைட் கடத்திய மூவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 15 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

அனுராதபுரத்திலிருந்து புத்தளத்திற்கு காரில் சட்ட விரோதமான முறையில் டைனமைட் மற்றும் அதற்கு பயன்படுத்தும் நூல் என்பனவற்றினை கொண்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரை புத்தளம் விசேட அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

புத்தளம் - அனுராதபுர வீதியில் 3ம் மைற்கல் பகுதியில் புத்தளம் நோக்கி வந்த காரினை பரிசோதித்த போது குறித்த காரில் 8 அங்குளம் நீளமான 7 டைனமைட் குச்சிகளும் அதற்கு பயன்படுத்தும் நூல்களும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், காரில் பயனித்த 03 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் பயனித்த காரும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் புத்தளம் பொலிசார் தொடர்ந்து விசாரனைகளினை நடத்துவதாகவும்; பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் ஆனமடுவ, தோனிகலை பிரதேசத்தில் கற்பாறை உடைக்கும் ஆலையில் கடமையாற்றும் ஊழியர்களென தெரிய வந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X