2025 மே 10, சனிக்கிழமை

புத்தளத்தில் பூரண ஹர்த்தால்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்,எம்.என்.எம். ஹிஜாஸ்

பேருவளை, அளுத்கம, தர்ஹா நகர் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை கண்டித்து சனிக்கிழமை (21) புத்தளம்  நகரில் சகல கடைகளும் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை(20) புத்தளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சனிக்கிழமை  கடைகளை மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்தால் காரணமாக புத்தளம் நகரின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை,  புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்றும் இன்று காலை புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X