2025 மே 09, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞன் மரணம்

Kanagaraj   / 2014 ஜூன் 28 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

முந்தல் பிரதேசத்தின் பத்துளு ஓயா ஆற்றில் நேற்று குளித்துக்கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கொத்தான்தீவு பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய முஹம்மது சப்ரான் எனும் இளைஞரே உயிரிந்துள்ளார்.

தனது நன்பர்களுடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாகவும் அதனையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய இளைஞனை மீட்டெடுத்து முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது  இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X