2025 மே 09, வெள்ளிக்கிழமை

“பொது பல சேனாவின் பூஜை குறித்து முஸ்லிம்கள் பதற்றமடைய தேவையில்லை“

Thipaan   / 2014 ஜூலை 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

”பொது பல சேனா அமைப்பினால் மாவத்தகம நகர் சாமோதய விஹாரையில் இன்று பி.ப. 5.30 மணிக்கு அனுஷ்டான பூஜையும் தர்மதேசனாவும் இடம்பெறுவதையிட்டு, முஸ்லிம்கள் எந்தவகையிலும் அச்சப்பட தேவையில்லை” என குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிகழ்வு இடம்பெறுவது தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பதற்ற சூழ்நிலை நிலவுவதால், குருநாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக்க ஆகியோரை நேரடியாக சந்தித்து, இந்த நிகழ்வுகளின் போது  எந்தவிதமான அசம்பாதவிங்களும் இடம்பெறாது பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக மாவத்தகமை நகரிலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் கிராமங்களிலும் எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறாத வண்ணம், சிவில் உடையில் இரகசியப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X