2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிராம சேவகர் தாக்கப்பட்டமைக்கு நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2014 ஜூலை 24 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜகான்


குருணாகல் - அம்பகோட்ட பகுதியில்  கிராம சேவகர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின்; முன்பாக கிராம சேவகர்கள் இன்று வியாழக்கிழமை ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் நீர்கொழும்பு பிரிவினர்; நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டம்; பிரதான வீதி வழியாக பேரணியாகச் சென்று மீணடும்  பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குருணாகல் - அம்பகோட்ட பகுதியில்  கிராம சேவகர் தாக்கப்பட்டமைக்கு எதிரிப்பு தெரிவித்து சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X