2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி பேராளர் மாநாடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். யூ.எம். சனூன்


நாட்டை பாதுகாக்கும் நீல காவலரன் எனப்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி பேராளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (10) புத்தளம் நகர  மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும், புத்தளம் நகர முதல்வருமான கே. ஏ. பாயிஸ்,  கல்பிட்டி தொகுதி அமைப்பாளரும்,  தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சர் விக்டர் அந்தோனி ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் கல்பிட்டி பிரதேசங்களில் இருந்து பெருந்தொகையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தாவரவியல், பொழுதுபோக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத், சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் லலித் திசாநாயக, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, மாகாண சபை உறுப்பினர்களான சிந்தக அமல் மாயாதுன்ன, என்.டி. எம். தாஹீர் மற்றும் நகர சபை,  பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தளம் நகர, கலா  மன்றங்களின் மாணவ மாணவிகளுடைய கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X