2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயங்களுடன் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தப்போவ பலதாகம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். எம். ரத்நாயக்கா (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இந்நபர் நேற்றிரவு தனது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த சமயம் அங்கு வந்துள்ள காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் படுகாயங்களுக்குள்ளான அவர் உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .