2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP)அனுசரணையுடன் பொது நிர்வாக அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டு வரும் நல்லாளுகை உள்ளூர் பொருளாதார அபிவிருத்தித் திட்டம் (Governance for Local Economic development) தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், பொலன்னறுவ சுது அரலிய ஹோட்டலில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு (05, 06, 07) ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவக (SLIDA) பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டம், பிரதேச மட்டத்தில் பெறுபேறு நோக்கிய இலக்கு திட்டம் தயாரித்தல், இலத்திரனியல் பிரஜைகள் பதிவு, சமூக மட்ட அமைப்புகளை வலுப்படுத்தல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X