2025 மே 09, வெள்ளிக்கிழமை

'கிறீஸ் பேய்க்கு' விளக்கமறியல்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு வயது 3 மாதங்களேயான குழந்தை கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலேபெருமஆராச்சிகே காமினி(32) என்றழைக்கப்படும் கிறீஸ் பேயை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

குருநாகல், கனேவத்தை, அம்பகொலவெவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் தூங்கிகொண்டிருந்த நான்கு வயது 3 மாதங்களேயானன தமாரா கேஷானி பண்டார விஜேகோன் என்ற சிறுமி கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதுடன்  வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரின் சகோதரன் மற்றும் அவர்களுடைய தாய் ஆகிய இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X