2025 மே 09, வெள்ளிக்கிழமை

கஞ்சா மற்றும் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Gavitha   / 2014 செப்டெம்பர் 18 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

கஞ்சா மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக கூறப்படும் இருவரை புதன்கிழமை (17) கைது செய்துள்ளதாக கொஸ்வத்தைப் பொலிஸார் தெரிவித்தனர். கொஸ்வத்தைப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹடவில பொத்துவடவான் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஒன்றரைக் கிலோகிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளியிடங்களிலிருந்து கஞ்சாவை மொத்தமாகக் கொண்டு வந்து சிறு பொதிகளில் அடைத்து இவர் விற்பனை செய்து வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கேரள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக தம்வசம் வைத்திருந்ததாகச் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன், மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொஸ்வத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X