2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளம் நகர சபை உறுப்பினராக முஹ்ஸி பதவிப் பிரமாணம்

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் நகர சபை உறுப்பினராக, சுயோட்சை குழுவில் போட்டியிட்ட எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி, வெள்ளிக்கிழமை(17) பதவிப் பிரமாணம்  செய்து கொண்டுள்ளார்.

கடந்த புத்தளம் நகர சபைக்கான தேர்தலில்  பந்து சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரு உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து பட்டியலில் அடுத்தடுத்து இருந்தவர்கள் நகர சபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து அவர்கள் அனைவரும் இராஜினாமாச் செய்திருந்தனர்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எஸ்.ஆர்.எம்.முஹ்ஸியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2010 ஆண்டு காலப் பகுதியில் புத்தளம் நகர சபையின் உறுப்பினராக செயற்பட்ட முஹ்ஸி புத்தளம் நகர சபையின் எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

புத்தளம் மன்பவு சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி அதிபரும்,அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் மாவட்ட பிரதித் தலைவரும், புத்தளம் மாவட்ட சமாதான நீதவானுமாகிய அல்ஹாபிஸ் ஏ.எம்.எம்.ரியாஸ் ஹஸ்ரத் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதன் போது முன்னாள் சமூக சேவைகள் பிரதியமைச்சரான எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் அவர்களும் உடனிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X