2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

புதிய நிர்வாக கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 நவம்பர் 14 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய நிர்வாக கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (13)  காலை இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.ராசிக்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதாவும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ், முன்னாள்  நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளம் வலய கல்விப் பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான இசட்.ஏ.சன்ஹீர், நிவ்டன் சிறிமான்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களுக்கும் கால்ப்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் பிரகாசித்த மாணவர்களுக்கும் நகர பிதாவினால் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .