2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காட்டு யானைத்தாக்கியதில் தந்தையும் மகனும் பலி

Kanagaraj   / 2014 நவம்பர் 25 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னக்கோன்
 
காட்டு யானைத்தாக்கியதில் தந்தையும் மகனும் பலியான சம்பவமொன்று பொலன்னறுவை சிறிபுர வீவத்புர பகுதியில் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

அந்த பிரதேசத்தில் உள்ள கல்கூரியில் தூங்கிக்கொண்டிரு;த போதே இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை பிரதேசத்தைச்சேர்ந்த ஏ.ராஜா(வயது 45) மற்றும் மகனான சசிகுமார் (வயது 06) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அரலங்கன்வில மற்றும் சிறிபுர பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது, மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்து வேறொருவருடன் குடும்பம் நடத்திவருவதனால், இவர், கல்கூரியில் நாள் கூலியாக வேலைசெய்து இருவரும் வசித்துவருவதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X