2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ.சு.கா.வின் புத்தளம் தொகுதி செயற்குழு கூட்டம்

Kogilavani   / 2015 ஜனவரி 20 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி செயற்குழு கூட்டம் திங்கட்கிழமை மாலை  (19) புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

புதிதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவிக்கு தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நூறு சத வீதம் விசுவாசமாக செயற்படுவதற்கு சகல செயற்குழு உறுப்பினர்களும் இதன்போது சத்தியபிரமானம் செய்துகொண்டனர்.  

ஜனாதிபதி தேர்தலை அடுத்து தற்போது எழுந்துள்ள புதிய கால நிலவரம் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் நகர பிதாவும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் களமிறங்குமாறு கோரி வலியுறுத்தப்பட்டது.

முஸ்லிம் வாக்குகளோடு தமிழ், சிங்கள மக்களின் வாக்குகளையும் அதிகப்படியாக பெற்றுக்கொள்வதற்கு இச்செயற்குழுவினால் குறிப்பாக சிங்கள உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரும் களமிறங்கி செயற்படப்போவதாக உறுதியளித்தனர்.

இக்கூட்டத்தில் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி லால், புத்தளம் உப நகர பிதா சுசந்த புஷ்பகுமார, வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் இந்திக்க சேனாதீர, ஆராச்சிகட்டு பிரதேச சபை உப தலைவர் தெச்சினா மூர்த்தி உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X