Kogilavani / 2015 ஜனவரி 26 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் போக்குவரத்து பொலிஸாருக்கும் இரு இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் வைத்தியசாலையில் சுற்றுச்சூழலில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் புத்தளம் தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே படுகாயமடைந்தள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago