Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஜனவரி 26 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
நவகத்தேகம அஹ்கன்கல பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு வனப் பகுதியில் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை, திங்கட்கிழமை (26) கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தேகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று அதிகாலை வேளை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் நவகத்தேகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அகழ்வுக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆறு பேரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jul 2025