2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புலமைப்பரிசில் நிதியுதவி வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு,  விஜயரத்தினம்  இந்து  மத்திய கல்லூரியில்  பயிலும்  மாணவர்களுக்கான  புலமைப்பரிசில்  நிதியுதவி  வழங்கும்  நிகழ்வு  அதிபர்  திரு. புவனேஸ்வரராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.

அண்மையில் நீர்கொழும்பில்  வெளியிடப்பட்ட  நெய்தல் நூலின்    விற்பனைப்பணத்திலிருந்து  மேற்படி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், திருமதி  மலர் சிவராஜலிங்கம்  புலமைப்பரிசில்  நிதியுதவித் தொகையினை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

பாடசாலை   ஆசிரியர்கள்  திருமதி  நித்தியகலா  கிருஷ்ணராம், செல்வி  லோஜினி   மற்றும்  பழைய மாணவர்  மன்றத்தின் பிரதிநிதி  திரு. முத்துலிங்கம்  ஜெயகாந்தன், மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0

  • N Sivarajah Saturday, 28 March 2015 07:04 PM

    Great achievement for the workI trust Murugapoopathy is behind this

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .